தமிழ்நாடு
பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: சென்னையில் இன்றைய நிலவரம்!
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதை அடுத்தே தமிழகம் உள்பட இந்தியாவிலும் பெட்ரோல் விலை உயர்ந்து வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் அளித்தன என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினந்தோறும் உயர்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம்
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 22 காசுகள் உயர்ந்துள்ளது. இதனையடுத்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100.23 என உயர்ந்துள்ளது. அதேபோல் சென்னையில் இன்று டீசல் விலை 28 காசுகள் உயர்ந்துள்ளது. இதனையடுத்து சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.95.59 என உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதே ரீதியில் உயர்ந்து கொண்டே சென்றால் டீசல் விலை 100 ரூபாயை தாண்டி விடும் என்றும் பெட்ரோல் விலை 110 ரூபாயை தாண்டும் என்றும் கூறப்படுகிறது.