தமிழ்நாடு
மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதியா? தமிழிசை விளக்கம்!
சென்னை: மேகதாதுவில் அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய மட்டுமே மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய அரசு இந்த அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இன்று காலைதான் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
அதில் மேகதாது அணை கட்ட சாத்தியக்கூறுகளை ஆராய மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் முழுதாக அணை கட்ட அனுமதி வழங்கப்படவில்லை.
மேகதாதுவில் அணை கட்ட தமிழக பாரதிய ஜனதா கட்சியும் ஒப்புக்கொள்ளாது. பாஜக கட்சி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே வருகிறது. நாங்கள் இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க மாட்டோம் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.