சினிமா
ஒரு பார்ட்டியில் குத்தாட்டம் போட்ட நடிகை நிவேதா தாமஸ் வைரலாகம் வீடியோ !
சினிமாவை தாண்டி நடிகைகள் எது செய்தாலும் வைரல் ஆகிவிடும. தமிழில் வெளியான மை டியர் பூதம் என்ற தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்துப் பிரபலமானவர் நிவேதா தாமஸ்.
சசிக்குமார் நடிப்பில் 2011- ம் ஆண்டு வெளியான போராளி படத்தில் ஹீரோயினாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ்ப் படங்கள் மட்டுமின்றித் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.
அதைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான குருவி படத்தில் விஜய்க்குத் தங்கையாக நடித்திருந்தார். அதேபோல் ஜில்லா படத்தில் மகாலட்சுமி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த நிவேதா, பாபநாசம் படத்தில் கமல்ஹாசனுக்கு மகளாக நடித்திருந்தார்.
அப்படி அண்மையில் நடிகை நிவேதா தாமஸ் ஒரு கல்யாண நிகழ்ச்சிக்குச் சென்றுள்ளார். அங்குத் தனது தம்பியுடன் செருப்பை எல்லாம் கழற்றிவிட்டு பிரபுதேவா – ஹன்சிகா நடிப்பில் வெளியான ‘குலேபகாவளி’ படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றுக்கு நடனமாடியிருக்கும் அவர், அதை அவரே இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.