சினிமா
நடிகர் சூரி இல்லத் திருமணவிழாவில் 10 பவுன் நகை திருட்டு…
தமிழ் சினிமாவில் பரோட்டா காமெடி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் சூரி. இப்படத்திற்கு பின் இவர் பரோட்டா சூரி என்றே அழைக்கப்பட்டு வருகிறார்.
சிவகார்த்திகேயனுடன் இவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய திரைப்படங்களில் இடம் பெற்ற காமெடி காட்சிகள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘விடுதலை’ திரைப்படத்தில் சூரி ஹீரோ அவதாரமும் எடுத்துள்ளார்.
இந்நிலையில், இவரின் சகோதரரின் மகள் திருமணம் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே கடந்த 9ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கருணாஸ், சீமான் என பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
பிரபலங்கள் வந்ததால் அவரை பார்ப்பதற்காக மணமகள் அறையில் இருந்த உறவினர்கள் அனைஅவரும் மணமேடைக்கு வந்தனர். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் ஒருவர் மணமகள் அறையில் வைக்கப்பட்டிருந்த 5 சவரன் மாலை, 3 சவரன் தங்க நெக்லஸ் மற்றும் 2 சவரன் கை செயினை திருடி சென்றுவிட்டனர். எனவே, சூரியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
எனவே, போலீசார் திருமண மண்டபத்திலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில், விக்னேஷ் என்பவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.