தமிழ்நாடு
உதயநிதி ஸ்டாலினுக்கு அண்ணா பல்கலையில் முக்கிய பொறுப்பு!
அண்ணா பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது.
திமுக தலைவரின் மகனும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார் என்பது தெரிந்ததே.
உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டிப்பாக அமைச்சர் பொறுப்பு கிடைக்கும் என்று திமுக வட்டாரங்கள் கூறிய நிலையில் அமைச்சரவை பட்டியல் வெளியான போது அதில் உதயநிதி ஸ்டாலின் பெயர் இல்லாமல் இருந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கிய பதவி விரைவில் அளிக்கப்படும் என்று திமுக வட்டாரங்கள் எதிர்பார்த்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி அண்ணா பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு அறிவிப்பு திமுக தொண்டர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணா பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் என்பது மிகவும் பொறுப்பு வாய்ந்த பதவி என்பதால் அந்த பதவியில் தனது முழு திறமையையும் உதயநிதி ஸ்டாலின் நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.