தமிழ்நாடு
கார் விபத்தில் சிக்கிய வானதி சீனிவாசன் மகன்: அதிர்ச்சி தகவல்!
கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் மகன் கார் விபத்தில் சிக்கிய தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக பிரபலம் வானதி சீனிவாசன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்டார் என்பதும் மாறி மாறி முன்னிலையில் இருந்து வந்தனர் என்பதும் இறுதியில் வானதி ஸ்ரீனிவாசன் வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்றதில் இருந்து சில சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் என்பதும் சமீபத்தில் கூட அவரது எம்எல்ஏ அலுவலகத்தில் பணம் எண்ணும் மிஹின் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் வானதி சீனிவாசன் மகன் ஆதர்ஷ் என்பவர் காரில் சென்று கொண்டிருந்தபோது அவர் சென்ற கார் விபத்துக்கு உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வானதி சீனிவாசன் மகன் சென்ற கார் விபத்துக்குள்ளானதாகவும் ஆனால் காயத்துடன் உயிர் தப்பியதாகவும் அவரது உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது.