Connect with us

இந்தியா

ஐஐடி சென்னை தொடர்ந்து 3வது ஆண்டாக சாதனை!

Published

on

தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பால் தயாரிக்கப்பட்ட இந்தியா தரவரிசை பட்டியல் 2021-ஐ மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று வெளியிட்டார்.

இணை அமைச்சர்கள் அன்னப்பூர்ணா தேவி, டாக்டர் சுபாஸ் சர்கார் மற்றும் டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், உயர்கல்வி செயலாளர் அமித் காரே, பல்கலைக்கழக மானிய குழு தலைவர் பேராசிரியர் டி பி சிங், அனைத்திந்திய தொழில்நுட்ப கல்விக் குழு தலைவர் பேராசிரியர் அனில் சஹஸ்ரபுத்தே, என்பிஏ தலைவர் பேராசிரியர் கே கே அகர்வால், என்பிஏ உறுப்பினர் செயலர் டாக்டர் அனில் குமார் நஸ்ஸா ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதான், சர்வதேச கற்றல் துறைக்கான இந்தியாவின் பங்களிப்பாகத் துடிப்பான மற்றும் முன்னுதாரணமான தரவரிசை பட்டியல் திகழும் என்றும், எனவே, நமது தரவரிசை பட்டியல் நாட்டுக்கு மட்டுமில்லாது உலகத்துக்கே, குறிப்பாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கு, அளவுகோலாக இருப்பதை நாம் உறுதி செய்யவேண்டுமென்றும் கூறினார். பிராந்திய தரவரிசை பட்டியலை உருவாக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

இந்திய தரவரிசை பட்டியல் 2021-ன் முக்கிய அம்சங்கள்:

* ஒட்டுமொத்த பிரிவிலும் பொறியியலிலும் சென்னை ஐஐடி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம்

* பல்கலைக்கழகங்களிலும் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆராய்ச்சி நிறுவன பிரிவிலும் ஐஐஎஸ், பெங்களூரு முதலிடம்

* மேலாண்மையில் ஐஐஎம் அகமதாபாத் முதலிடம், மருத்துவ கல்வியில் தொடர்ந்து நான்காவது முறையாகப் புதுதில்லி எய்ம்ஸ் முதலிடம்

* மருந்தியலில் தொடர்ந்து நான்காவது முறையாக ஜாமியா ஹம்தார்த் முதலிடம்

* கல்லூரிகள் பிரிவில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக மிராண்டா கல்லூரி முதலிடம்

* கட்டிடவியலில் ஐஐடி காரக்பூரை பின்னுக்குத் தள்ளி ஐஐடி ரூர்கி முதல் முறையாக முதலிடம்

* சட்டப் படிப்பில் தொடர்ந்து நான்காவது முறையாகப் பெங்களூருவில் உள்ள தேசிய சட்டப் பள்ளி முதலிடம்

* முதல் 10 கல்லூரிகளில் ஐந்து தில்லியில் உள்ளன

* மணிப்பால் பல் மருத்துவக் கல்லூரி பல் மருத்துவப் பிரிவில் முதலிடம்.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (20/10/2024)

வணிகம்1 நாள் ago

இன்று புதிய உச்சத்தை தொட்ட தங்கம், வெள்ளி விலை!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் (19/10/2024)

செய்திகள்2 நாட்கள் ago

ஆளுநர் ரவி தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடம்’ நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

ஒரே நாளில் 45,000 வேலைவாய்ப்புகள்! – தமிழக அரசின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள்!

ஜோதிடம்2 நாட்கள் ago

குரு வக்ர பெயர்ச்சி: நற்பலன் பெறும் ராசிகள் யாவர்?

செய்திகள்2 நாட்கள் ago

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3 சதவீதம் உயர்வு!

செய்திகள்2 நாட்கள் ago

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு(18-10-2024)!

ஜோதிடம்3 நாட்கள் ago

500 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம் – இந்த 3 ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியவிருக்கிறது!

வணிகம்4 நாட்கள் ago

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ரூ.360 வரை உயர்வு!

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TNPSC குரூப் 5A வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பிக்கலாம்! முழு விவரங்கள் உள்ளே!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(16-10-2024)

வணிகம்3 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் உயரும் தங்கம் விலை!(17-10-2024)

தமிழ்நாடு4 நாட்கள் ago

சென்னை மழைப் பேரிடரில் பாதிக்கப்பட்டோருக்கு முதல்வர் ஸ்டாலின் இலவச உணவு அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

இயக்குனராக அவதாரம் எடுக்கும் யுவன் சங்கர் ராஜா!

ஆன்மீகம்3 நாட்கள் ago

குரு சாட்டையை எடுத்துவிட்டார்: அக்டோபர் முதல் தங்கத்தில் அடி விழும் ராசிகள்! மகிழ்ச்சியின் திருப்பம்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – அக்டோபர் 15, 2024

வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

ரூ.42,500/- சம்பளத்தில் BHEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (16/10/2024)