தொழில்நுட்பம்
பட்ஜெட் விலையில் விற்பனைக்கு களமிறங்கிய விவோ வொய்95.!
விவோ வொய்95 என்ற பெயரில் விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது அடுத்த புதிய மாடல் ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. விற்பனைக்குக் களமிறங்கியுள்ள இந்த புதிய விவோ ஸ்மார்ட் போன் பல சிறப்பம்சங்களுடன் பட்ஜெட் விலையில் பயனர்களை கவர்ந்துள்ளது.
இந்த புதிய விவோ வொய்95 ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி வேரியண்ட் மாடலில் “ஹாலோ ஃபுல் வியூ” டிஸ்ப்ளேயுடன் கூடிய ஸ்னாப் டிராகன் 439 12என்.எம். பிராசஸர்ருடன் களமிறங்கியுள்ளது. இத்துடன் தலை சிறந்த பல அம்சங்களுடன் இந்த புதிய விவோ வொய்95 ஸ்மார்ட் போன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது.
அட்டகாசமான புகைப்பட சேவையை வழங்குவதற்காகவே விவோ நிறுவனம் ஏ.ஐ ஆற்றலுடன் கூடிய ஸ்மார்ட் கேமராகளை இந்த போன்னில் பொருந்தியுள்ளது. விவோ வொய்95 ஸ்மார்ட் போன் இல் 13 எம்.பி. பிரைமரி கேமராவுடன் கூடிய 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி பின்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 20 எம்.பி. கொண்ட முன்பக்க செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. ஃபேஸ் அன்லாக் மற்றும் ஏ.ஐ. பியூட்டி அம்சங்கள் போன்ற பல கேமரா சேவைகளும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
விவோ வை95 ஸ்மார்ட்போன் ஸ்டேரி நைட் மற்றும் நெபுளா பர்ப்பிள் என்ற இரண்டு நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்திய சந்தையில் விவோ வை95 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெறும் ரூ.16,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.