சினிமா செய்திகள்
மாஸ்கோவில் தல அஜித்: வைரல் புகைப்படம்!
தல அஜீத் சமீபத்தில் ’வலிமை’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்றார் என்பதும் அங்கு அவர் படப்பிடிப்பை முடித்துவிட்டு உலகம் சுற்றும் அஜித் ஆக மாறுவதற்காக பைக்கிலேயே உலகத்தையே சுற்ற இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இதற்காக ஏற்கனவே பைக்கில் நீண்ட ரைட் செய்தவர்களிடம் அவர் ஆலோசனை பெற்று வருவதாகவும் அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டது
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ரஷ்யாவிலிருந்து பயிற்சி பெற்று வரும் அஜித்தி சமீபத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றை ஒன்று வெளியாகி உள்ளது. மால் போன்று இருக்கும் இடத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த புகைப்படத்தில் ரஷ்யாவாழ் தமிழர்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தில் அஜித் செம க்யூட்டாக இருப்பதாகவும், மிக அழகாக இருப்பதாகவும், தல வேற லெவலில் இருப்பதாகவும் கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அஜீத் பைக்கிலேயே உலகின் பல நாடுகளை சுற்றி வந்த பின் அடுத்த படத்திற்கான பணியை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித்தின் அடுத்த படத்தை எச் வினோத் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தையும் போனிகபூர் தயாரிக்க இருப்பதாகவும் இது ஒரு குறுகிய கால சென்டிமென்ட் கலந்த குடும்ப படம் என்றும் கூறப்படுகிறது
இந்த நிலையில் அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவில் விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை போனிகபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து தயாரித்து வருகின்றன.