சினிமா செய்திகள்
ஹிருத்திக் ரோஷனை பின்னுக்கு தள்ளி விளம்பர படத்திலும் சாதனை செய்த சிம்பு!
சிம்பு நடித்த திரைப்படங்கள் வசூல் அளவில் சாதனை செய்து கொண்டிருக்கும் நிலையில் சிம்பு நடித்த விளம்பர படமும் சாதனை செய்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
பிரபல ஆன்லைன் ஆடை நிறுவனமான மிந்த்ரா என்ற ஃபேஷன் நிறுவனத்திற்காக சிம்பு நடித்த விளம்பரம் ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சிம்புவின் இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட பக்கங்களில் இந்த வீடியோ வெளியாகி உள்ள நிலையில் இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் ஏராளமானோர் பகிர்ந்தும் ரீட்வீட் செய்தும் வருகின்றனர்.
இந்த வீடியோவில் விதவிதமான ஆடைகளை அணிந்து வரும் சிம்பு மிந்த்ரா நிறுவனத்தின் ஆடைகள் குறித்து பெருமையாக பேசும் வசனங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிம்பு இந்த விளம்பரத்தில் விதவிதமான வண்ண வண்ண ஸ்டைலிஷான ஆடைகளில் தோன்றி அசத்தியுள்ளார்.
சிம்புவுக்கு முன்னர் இதே நிறுவனத்திற்காக ஹிருத்திக் ரோஷன், விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான் ஆகிய நடிகர்களும் சமந்தா, கியாரா அத்வானி உள்ளிட்ட சில நடிகைகளும் நடித்திருந்தனர் என்பதும், ஆனால் அவர்கள் நடித்த விளம்பர வீடியோக்களை விட சிம்பு நடித்த விளம்பர வீடியோ அதிகமான நபர்களால் ரீடுவிட் செய்யப்பட்டு உள்ளது என்பதும் அதிக லைக்ஸ்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விளம்பர் வீடியோ வெளியாகி 19 மணி நேரத்தில் 431 ரீடுவிட்டுக்களை பெற்றுள்ளது என்பதும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விளம்பர படத்தின் மூலம் ஹிருத்திக் ரோஷனை பின்னுக்கு தள்ளி சிம்பு செய்த சாதனையை தற்போது அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
Thrilled to be a part of the Myntra style fam. It’s time to forget the rest of fashion and shop the best of fashion with Myntra, India's Fashion Expert ????????????#SilambarasanTR #Myntra https://t.co/VPnqhPKYGc pic.twitter.com/MA3RFTR4kg
— Silambarasan TR (@SilambarasanTR_) September 3, 2021