உலகம்
இறந்து போன மனைவி… ஒரு வயது மகள்..கண்ணீரை வரவழைத்த போட்டோஷூட்…
![photoshoot - Bhoomitoday photo](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/photoshoot.jpg)
போட்டோஷூட் என்பது பொதுவாக மகிழ்ச்சி தரும் ஒன்றாக இருக்கும். மறக்க முடியாத பசுமையான நினைவுகளையும் கொண்டிருக்கும், ஆனால், ஒருவர் தனது மகளுடன் நடத்தியுள்ள போட்டோஷுட் பலரையும் கண் கலங்க வைத்துள்ளது.
அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் வசித்து வருபவர் ஜேம்ஸ் ஆல்வர்ஸ். இவரின் கர்ப்பிணி மனைவி யெசினியா கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது ஒரு கார் மோதி மரணமடைந்தார். ஆனால், அவரின் குழந்தை உயிரோடு இருந்தது. எனவே, அறுவை சிகிச்சை மூலம் அந்த பெண் குழந்தை வெளியே எடுக்கப்பட்டது. தற்போது அந்த குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார் ஜேம்ஸ்.
மேலும் மனைவி கர்ப்பிணியாக இருந்த போது அவரை வைத்து புகைப்படம் எடுத்த அதே இடங்களுக்கு சென்று மகளை வைத்து புகைப்படங்களை எடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் பலரையும் அழ வைத்துள்ளது.