சினிமா
மீண்டும் அஜித் படத்தை ரீமேக் செய்யும் சிரஞ்சீவி….தெலுங்கில் எடுபடுமா?….
![siranjeevi - Bhoomitoday siranjeevi](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/siranjeevi.jpg)
தமிழில் ரஜினிகாந்த் போல் தெலுங்கில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் சிரஞ்சீவி. 40 வருடங்களுக்கும் மேல் நடித்து வருகிறார். ஆனாலும், அவரின் மாரிக்கெட் ரஜினியை போல குறையவே இல்லை.
நேரடி தெலுங்கு திரைப்படங்களில் நடித்தாலும் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் ஹிட் அடிக்கும் திரைப்படங்களை தெலுங்கில் ரீமேக் செய்து நடித்து வருபவர் சிரஞ்சீவி. விஜயகாந்த் நடித்த ‘ரமணா’ துவ்ங்கி பல படங்களில் அப்படி ரீமேக் செய்து நடித்துள்ளார். விஜய் நடித்த கத்தி பட ரீமேக்கில் நடித்தார். அடுத்து அஜித் நடித்த ‘வேதாளம்’ பட ரீமேக்கில் நடிக்கவுள்ளார். தற்போது மலையாளத்தில் ஹிட் அடித்த ‘லூசிபர்’ திரைப்பட ரீமேக்கில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்திலும் சிரஞ்சீவி நடிக்கவுள்ளாராம். இப்படத்தின் ரீமேக்கை வாங்கும் வேலையில் இறங்கியுள்ள அவர் இப்படத்திற்கு சரியான இயக்குனரையும் அவர் தேடி வருகிறாராம்.