சினிமா
ஷங்கரின் புதிய படத்தில் பிரபல நடிகர்.. பரபரப்பு அப்டேட்…..
இயக்குனர் ஷங்கர், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வந்த ’இந்தியன் 2’ என்ற திரைப்படத்தை இயக்கிய நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தற்போது தெலுங்கில் ராம்சரண் தேஜா நடிக்கும் திரைப்படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளார்.
இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. பிரபல பாலிவுட் மற்றும் தெலுங்கு நடிகை கைரா அத்வானி தான் ஷங்கர் இயக்கும் படத்தின் நாயகியாக நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ராம்சரண் தேஜா, மகேஷ் பாபு உள்பட பல தெலுங்கு பிரபலங்களுடன் நடித்துள்ளார் . அதேபோல், இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை அஞ்சலி நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், முக்கிய வேடத்தில் மலையாள நடிகர் ஜெயராம் நடிக்கவுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து இப்படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளார்.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.