சினிமா செய்திகள்
இது பாக்ஸிங் இல்ல வாத்தியாரே, டுவிட்டர், ரத்த பூமி: பசுபதிக்கு ஆர்யா அட்வைஸ்
டுவிட்டருக்கு வந்த பசுபதியை நடிகர் ஆர்யா பயமுறுத்தும் வகையில் ’இது பாக்சிங் போல அல்ல, ரத்த பூமி என்று அட்வைஸ் செய்து டுவிட் ஒன்றை பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா, பசுபதி உள்பட பலர் நடித்த ’சார்பட்டா பரம்பரை திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
’சார்பட்டா பரம்பரை’ படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தால் கோடிகளை அள்ளி இருக்கும் என்றாலும் அமேசான் ஓடிடியில் வெளியாகிய போதிலும் இந்த படம் நல்ல வசூலை குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படம் குறித்த விமர்சனங்கள், மீம்ஸ்கள், அரசியல்வாதிகளின் கருத்துக்கள், திரையுலக பிரபலங்களின் விமர்சனங்கள், மற்றும் எதிர்மறை கருத்துக்கள் ஆகியவை கடந்த சில நாள்களாக வெளிவந்து கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தில் ரங்கன் வாத்தியாராக மிக அபாரமாக நடித்திருந்த நடிகர் பசுபதி தற்போது டுவிட்டரில் இணைந்துள்ளார். இதனை அடுத்து ஆர்யா அவருக்கு அட்வைஸ் செய்யும்விதமாக கூறியபோது, ‘வாத்தியாரே இதுதான் டுவிட்டர், பாக்சிங்கை விட ரத்த பூமி. உன்னோட பெயரில் இங்க நிறைய பேரு இருக்காங்க தெரிஞ்சும் ஒரிஜினல் நான்தான்னு உள்ள வந்த பார்த்தியா, உன் மனசே மனசு தான். வா வாத்தியரே, இந்த வேர்ல்டு உள்ள போகலாம்’ என்று பதிவு செய்துள்ளார்.
ஏற்கனவே பசுபதியின் பெயரில் பல போலி அக்கவுண்ட்களை இருப்பதை அடுத்து தற்போது பசுபதி உண்மையாகவே டுவிட்டருக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Vaathiyare Idhaan Twitter Vaathiyarey. boxing eh vida rattha boomi ???????? unnoda peru la inga neraya peru irukaanganu therinjadhum original naathaanda nu ulla vandha paathiya. un mansey mansu dhaan. Vaa vaathiyare indha word ulla polam
this is the Official handle @PasupathyMasi pic.twitter.com/Mzh4aEfQbh
— Arya (@arya_offl) August 26, 2021