ஓரம் போ முதல் வெந்து தணிந்தது காடு வரை.. பெயர் மாற்றப்பட்ட தமிழ் படங்கள்!

ஆர்யா, பூஜா நடிப்பில் ரிலீஸான படம் ஓரம் போ. முதலில் இந்த படத்துக்கு ஆட்டோ என பெயரிடப்பட்டு இருந்தது. தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு கிடைக்கும் என்பதால் ஓரம் போ என பெயரை மாற்றினர்.

சாய் பல்லவி நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான படம் தியா. முதலில் இந்த படத்துக்கு முதலில் கரு என பெயரிட்டு இருந்தனர். ஆனால் இந்த படம் தெலுங்கிலும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு தியா என பெயரை மாற்றினர்.

ஜெயம் ரவி, த்ரிஷா நடிப்பில் சூப்பர் ஹிட் ஆன குடும்ப படம் உனக்கும் எனக்கும். சம்திங் சம்திங் என பெயரிடப்பட்ட இந்த படம் வரி விலக்கு வேண்டும் என்பதற்காக உனக்கும் எனக்கும் என பெயர் மாற்றப்பட்டது.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான படம் மெல்லிசை. ரிலீஸ்க்கு ஏற்பட்ட தாமதம் காரணமாகப் புரியாத புதிர் என பெயர் மாற்றப்பட்டு புதிய படமாக ரிலீஸ் ஆனது.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்த படம் பசங்க. முதலில் இந்த படத்துக்கு ஹைக்கூ என பெயரிடப்பட்டு இருந்தது. இந்த படத்துக்கும் வரி விலக்கு தான் பெயர் மாற்றத்துக்குக் காரணம்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரிலீஸ் ஆன காக்கி சட்டை படத்துக்கு டாணா என்று தான் முதலில் பெயரிடப்பட்டு இருந்தது.

விக்ரம், பேபி சாரா, அனுஷ்கா, சந்தானம் நடிப்பில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் தெய்வ திருமகள், முதலில் இந்த படத்துக்குத் தெய்வ மகன் என பெயரிடப்பட்டு இருந்தது.

கே.எஸ்.ரவிகுமார் நடிப்பில் அஜித் 3 வேடங்களில் நடித்து ரிலீஸ் ஆன படம் வரலாறு. முதலில் இந்த படத்துக்கு காட்ஃபாதர் என பெயரிடப்பட்டு இருந்தது.

விஷ்ணு விஷால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கி ரிலீஸ் ஆன படம் ஜீவா. இந்த படத்துக்கு வீர தூற சூரன் என பெயரிடப்பட்டு இருந்தது.

சிம்பு, கவுதம் மேனன் 3வது முறையாக இணையும் படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்துக்கு முதலில் நதிகளிலே நீராடும் சூரியன் என பெயரிடப்பட்டு இருந்தது. கதை மாற்றத்தால் படத்தின் பெயரும் மாறியுள்ளது.