இந்தியா
ஆதார் கார்டு போட்டோவை பளிச் என மாற்ற ஒரு சூப்பர் வழி!
ஆதார் கார்டு என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் அத்தியாவசியமானது என்பதும் தற்போது கிட்டத்தட்ட அனைத்து ஆவணங்களிலும் ஆதார் கார்டுகள் இணைக்கப்பட்டு விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஆதார் கார்டு பல்வேறு விஷயங்களுக்கு உதவி செய்தாலும் ஆதார் கார்டில் உள்ள புகைப்படங்கள் பலருக்கு நெருடலாக உள்ளது. பல புகைப்படங்கள் மங்கலாக இருப்பதாகவும் யாரென்றே தெரியாதது போல் இருப்பதாகவும் சிறு வயதில் எடுத்த ஆதார் கார்டு புகைப்படத்திற்கும் இப்போது உள்ள புகைப்படத்திற்கு மாறுபட்ட வகையில் இருப்பதாகவும் பலர் குறை கூறுவதுண்டு.
இந்த நிலையில் ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தை லேட்டஸ்டாக மாற்ற வேண்டும் என்றால் அதற்கு ஒரு எளிய வழி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டில் பழைய புகைப்படம் அல்லது மங்கலான புகைப்படம் இருந்தால் உடனடியாக நீங்கள் ஆதார் கார்டை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.
பின்பு அதனை எடுத்துக்கொண்டு ஆதார் சேர்க்கை மையத்திற்கு சென்று அங்குள்ள நிர்வாகியிடம் ஆதார் கார்டில் இருக்கும் புகைப்படத்தை மாற்றவேண்டும் என்று கூற வேண்டும். அதற்கு அவர் ஒரு விண்ணப்பத்தை அளிப்பார். அந்த விண்ணப்பத்தை நிரப்பி அதற்கான கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டும்.
அதன்பின்னர் ஆதார் கார்டு அமைப்பின் அதிகாரபூர்வ நிர்வாகி ஒருவர் உங்களை புகைப்படத்தை கிளிக் செய்வார். இப்போது உங்களுடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஆதார் அட்டையில் பதிவு செய்யப்படும். இந்த எளிய முறையில் மூலம் ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை நீங்கள் எளிதாக மாற்றிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.