சினிமா
பாகிஸ்தானில் ரஜினிக்கு இப்படியொரு வரவேற்பா?
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் விரைவில் வெளியாகும் 2.0 திரைப்படம் பாகிஸ்தானிலும் ரிலீசாகவுள்ளது.
லைகா தயாரிப்பில் இந்தியாவின் மிக பிரம்மாண்டமான படமாக 2.0 உருவாகியுள்ளது. வரும் நவம்பர் 29 ரிலீசாகவுள்ள இந்த படம் உலகின் பல்வேறு நாடுகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. மேலும், இந்த படம் இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானிலும் ரிலீசாகிறதாம்.
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளதால், இந்த படம் பாகிஸ்தானில் வெளியாகவில்லையாம். சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு பாகிஸ்தானில் அனேக ரசிகர்கள் உள்ளதாலும், இப்படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருப்பதாலும் தான் அங்கு 2.0வை ரிலீஸ் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.