Tilted Green Blob

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து அகிலன் திடீர் விலகல்.. என்ன காரணம்?

Tilted Green Blob

விஜய் டிவியில் அதிக பார்வையாளர்களைக் கொண்ட சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.

Tilted Green Blob

இந்த சீரியலில் பாரதிக்குத் தம்பியாக அகிலனும், கண்ணம்மாவுக்குத் தங்கையாக அஞ்சலியும் கதாபாத்திரங்களும் உள்ளன.

Tilted Green Blob

முதலில் அஞ்சலியின் கதாபாத்திரம் நெகட்டிவாக இருந்து வந்தது. அகிலன், அஞ்சலி இருவர் இடையில் எப்போதும் சண்டை என முதலிலிருந்து வந்தது.

Tilted Green Blob

இப்போது அஞ்சலி கதாபாத்திரம் திடீரென நல்லவளாக மாற, அகிலன், அஞ்சலி இருவரின் ரொமான்ஸ் காட்சிகள் ரசிக்கும் படி இருந்து வந்தது.

Tilted Green Blob

ஆனால் திடீரென அகிலன் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Tilted Green Blob

பிரபு தேவாவுடன் ஒரு படன், விஷாலுடன் இணைந்து ஒரு படம், பிசா3 உள்ளிட்ட 5 படங்களில் நடிக்கும் வாய்ப்பு அகிலனுக்குக் கிடைத்துள்ளது.

Tilted Green Blob

எனவே பாரதி கண்ணம்மா சீரியலில் தொடர்ந்து நடிக்க முடியாத சூழல் அகிலனுக்கு உருவாகியுள்ளது. எனவே தான் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

Tilted Green Blob

அகிலனின் மனைவி அஞ்சலிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெறும் போது, புதிதாக அகிலன் கதாபாத்திரத்தில் நடிப்பவர் அறிமுகம் ஆவார் என கூறப்படுகிறது.

Tilted Green Blob

பாரதி கண்ணம்மா ரசிகர்களை நான் கண்டிப்பாக மிஸ் பண்ணுவேன். நான் இன்னும் அடுத்த கட்டத்துக்குச் சென்று உங்களை மகிழ்விப்பேன் என்று தனது ரசிகர்களுக்கு அகிலன் தெரிவித்துள்ளார்.

Tilted Green Blob

சென்னையில் ஒருநாள், அகிலன் திரிஷா இல்லனா நயன்தாரா, இறைவி, பியார் ப்ரேமா காதல் உள்ளிட்ட படங்களில் சிறு கதாபாத்திரங்களில் ஏற்கனவே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.