Connect with us

தமிழ்நாடு

2ஆம் கட்ட மெட்ரோ பணி ஆரம்பம்: சென்னையின் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

Published

on

சென்னையில் 2வது மெட்ரோ ரயில் பாதை பணிகள் தொடங்க உள்ளதை அடுத்து சென்னையில் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் சந்திப்பிலிருந்து போரூர் சந்திப்பு வரை ஆற்காடு சாலை வழியாக சென்னை மெட்ரோ இரயில் 2ம் கட்டபணி துவங்கவுள்ள காரணத்தினால் 17.08.2021 முதல் போக்குவரதது மாற்றம் அமல்படுத்தப்படுகிறது.

சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது : சென்னை பெருநகர காவல்துறை போக்குவரத்து தெற்கு மாவட்ட எல்லைக்குட்பட்ட கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் சந்திப்பிலிருந்து போரூர் சந்திப்பு வரை ஆற்காடு சாலை வழியாக சென்னை மெட்ரோ இரயில் 2ம் கட்டபணி துவங்கவுள்ளது. இதன் காரணமாக 17.08.2021 அன்று காலை 06.00 மணிமுதல் 22.00 மணி வரையில் பரிச்சார்த்த முறையில் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகின்றது.

* போரூர் மார்க்கத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் ஆற்காடு சாலையில் செல்லலாம். இவ்வாகனங்களுக்கு எவ்வித போக்குவரத்து மாற்றமும் செய்யப்படவில்லை.

ஆற்காடு சாலையில் 80 அடி சாலை சந்திப்பிலிருந்து கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் சந்திப்பு வரை ஒருவழி பாதையாக மாற்றப்படவுள்ளது.

கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கத்திலிருந்து சாலிகிராமம், போரூர் நோக்கி செல்லும் வாகனங்கள் ஆற்காடு சாலையில் பவர் ஹவுஸ் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி அம்பேத்கர் சாலை, அசோக்நகர் 2வது அவின்யூ சாலை, பி.டி.ராஜன் சாலை, ராஜமன்னார் சாலை, 80 அடி சாலை வழியாக ஆற்காடு சாலை செல்லலாம் மற்றும் வன்னியர் சாலை வழியாக விருகம்பாக்கம் செல்லலாம்.

கோடம்பாக்கம் மேம்பாலத்திலிருந்து வடபழனி சந்திப்பிற்கு செல்ல வேண்டிய வாகனங்கள் ஆற்காடு சாலையில் பவர் ஹவுஸ் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி அம்பேத்கர் சாலை, அசோக்நகர் 2வது அவின்யூ சாலை, ஜவஹர்லால் நேரு 100 அடி சாலை வழியாக வடபழனி சந்திப்பை அடையலாம்.

போரூர் மார்க்கத்திலிருந்து கே.கே.நகர் செல்லும் வாகனங்கள் 80 அடி சாலையில் வலதுபுறம் திரும்பி இராஜமன்னார் சாலையில் இடதுபுறம் திரும்பி பி.டி.ராஜன், இராஜமன்னார் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி கே.கே.நகர் காவல் நிலையம் வழியாக கே.கே.நகர், உதயம் செல்லலாம். அசோக் பில்லர் மார்க்கத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள் அம்பேத்கர் சாலையில் அசோக்நகர் காவல் நிலையம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி அசோக்நகர் 2வது அவின்யூ சாலை, ஜவஹர்லால் நேரு 100அடி சாலை, ஆற்காடு சாலை வழியாக கோடம்பாக்கம் மேம்பாலம் செல்லலாம்.

வடபழனி சந்திப்பிலிருந்து தியாகராயநகர் நோக்கி செல்லும் வாகனங்கள் துரைசாமி சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி துரைசாமி சாலை, 2வது அவின்யூ சாலை, நேராக 8வது தெரு, 3வது அவின்யூ,வில் இடதுபுறம் திரும்பி 4வது அவின்யூ சந்திப்பு வழியாக தியாகராயநகர் செல்லலாம்.

கே.கே.நகரிலிருந்து பி.டி.ராஜன் சாலை வழியாக வரும் வாகனங்கள் ராஜமன்னார்- பி.டி. ராஜன் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி ஜவஹர்லால் நேரு 100 அடி சாலை, 2வது அவின்யூ செல்ல அனுமதி இல்லை. மாறாக இடதுபுறம் திரும்பி ராஜமன்னார் சாலை, 80 அடி சாலை வழியாக ஆற்காடு சாலை சென்றடையலாம்.

வன்னியர் தெருவிலிருந்து ராஜமன்னார் சாலையில் வரும் வாகனங்கள் நேரே செல்லஅனுமதி இல்லை. மாறாக 80 அடி சாலை வழியாக ஆற்காடு சாலை சென்று செல்லவேண்டிய இடத்திற்கு செல்லலாம் அல்லது கே.கே.நகர், உதயம் வழியாக செல்லலாம்.

முனுசாமி சாலை கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து வடபழனி மேம்பாலம் சர்விஸ் சாலையில் வரும் வாகனங்கள் வடபழனி சந்திப்பில் நேராக செல்ல அனுமதி இல்லை. வழக்கம் போல இடதுபுறம் திரும்பி ஆற்காடு சாலை சென்று துரைசாமி சாலை வழியாக அசோக் பில்லர் நோக்கி நேராக செல்லலாம்.

சாலிகிராமத்திலிருந்து கோடம்பாக்கம் நோக்கி செல்லும் வாகனங்கள் ஒருவழி பாதையில் வரும்பொழுது பேருந்து மற்றும் வணிக வாகனங்கள் சாலையின் இடதுபுற ஓடுதளத்திலும், (Left Lane), இலகுரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அனைத்தும் சாலையின் வலதுபுற ஓடுதளத்தில் (Right Lane) செல்ல வேண்டும். கனரக வாகனங்கள் மற்றும் வணிக வாகனங்கள் சாலையின் வலதுபுற ஓடுதளத்தில் (Right Lane) செல்லக்கூடாது.”

இவ்வாறு சென்னை மாநகராட்சியின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்தியா5 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்5 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு8 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்14 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்15 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!