வைரல் செய்திகள்
தளபதி விஜய்- தல தோனி சந்திப்பில் பின்னணி என்ன தெரியுமா?- வெளியான தகவல்
![dhoni- vijay - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/dhoni-vijay.jpg)
நேற்று தல தோனி மற்றும் தளபதி விஜய் சந்தித்துக் கொண்ட புகைப்படம் தான் இரண்டு நாட்களாக வைரல் லிஸ்டில் உள்ளது.
திடீரென தோனி மற்றும் விஜய் இருவரும் ஏன் சந்தித்துக் கொண்டனர் என்ற கேள்வியும் இவர்களின் புகைப்படத்துக்கு இணையாக வைரல் ஆனது. தளபது விஜய் தற்போது பீஸ்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். பீஸ்ட் படத்தில் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. முதல் கட்டமாக ஜார்ஜியாவில் பீஸ்ட் படப்பிடிப்பு நடந்தது.
தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. கோகுலம் ஸ்டுடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த சூழலில் தல தோனி இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் சென்னை வந்தார். ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி சென்னையில் இருந்து மொத்த சிஎஸ்கே அணியினர் உடன் இணைந்து ஐபிஎல்-க்காக துபாய் கிளம்புவதாக இருந்தது.
சென்னையில் ஒரு விளம்பரத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியிருந்தார் தோனி. தோனி பங்குபெற்ற விளம்பரத்தின் படப்பிடிப்பும் சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் தான் நடைபெற்றது. இதனால் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் தோனியும் விஜய்யும் இருக்க இருவரும் பரஸ்பரம் மரியாதை நிமித்தமாக சந்தித்துக் கொண்டார்களாம். தோனி இன்று தனது சிஎஸ்கே அணி உடன் துபாய் கிளம்பிவிட்டார்.