சினிமா செய்திகள்
ராகவா லாரன்ஸ் படமா இது? அதிர வைக்கும் போஸ்டர் மற்றும் டைட்டில்!
![durga - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/durga.jpg)
பிரபல நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு சற்றுமுன் வெளிவந்துள்ளது. இது குறித்து ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் புதிய போஸ்டர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டரில் இந்த படத்தின் டைட்டில் ’துர்கா’ என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தில் இருக்கும் வித்தியாசமான கெட்டப்பில் இருப்பது ராகவா லாரன்ஸா? என்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வயதான சாமியார் வேடத்தில் கண்களை மேல் நோக்கி பார்த்தவாறு இருக்கும் இந்த உருவம் பார்ப்பவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது என்பது குறிப்பிடதக்கது.
பொதுவாக லாரன்ஸ் படத்தில் பேய்கள் மற்றும் ஆன்மீகம் இருக்கும் என்பதை அடுத்து இதுவும் அது போன்ற ஒரு திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை ராகவா லாரன்ஸ் தனது சொந்த நிறுவனமான ராகவேந்திர புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க உள்ளார்.
இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் டெக்னீசியன் குறித்த தகவலை அடுத்தடுத்து வெளியிட இருப்பதாகவும் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
மேலும் ராகவா லாரன்ஸ் தனது ’ருத்ரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் ’சந்திரமுகி 2’ என்ற படத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Durga !!!
Need all your blessings ???????? pic.twitter.com/pVYNepkgFM
— Raghava Lawrence (@offl_Lawrence) August 6, 2021