இந்தியா
கேல் ரத்னா விருது பெயர் மாற்றம்.. பிரதமர் மொடி அறிவிப்பு!
கேல் ரத்னா விருது இனி மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா என்ற பெயரில் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இந்திய விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தோருக்கு வழங்கப்படும் உயரிய விருது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது. முன்னாள் இந்தியப் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி நினைவாக இவ்விருது பெயரிடப்பட்டு இருந்தது.
இனி இது ஹாக்கி விளையாட்டு ஜாம்பவானான மேஜர் தயான்சந்த் விருது பெயரில் வழங்கப்பட உள்ளது.
1991-92 ஆண்டில் நிறுவப்பட்ட இவ்விருது தேசிய அளவில் விளையாட்டுத்துறையில் உயர்ந்த அங்கீகாரம் பெற்றது.
முதல் கேல் ரத்னா விருதை தமிழகத்தை சேர்ந்த செஸ் சாம்பியன் விசுவநாதன் ஆனந்த் 1991-92 ஆண்டில் பெற்றார் என்பது பெருமைக்குறியது.