சினிமா செய்திகள்
பிர்சா முண்டா சர்ச்சை; என்னது கோபி இப்படி சொல்லிட்டாரே?
![Gopi Nainar About Birsa Munda Rumours - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/11/124691_thumb_665.jpg)
பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை இந்தியில் பா. ரஞ்சித் இயக்கவுள்ளார் என்ற அறிவிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
அறிவிப்பு வெளியானதும், பிர்சா முண்டா வாழ்க்கையை மையமாக வைத்து கோபி நயினார் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் என்றும், ஏற்கனவே கோபி நயினாரின் கருப்பர் நகரம் படத்தின் கதையை சுட்டுத் தான் ரஞ்சித் மெட்ராஸ் படம் எடுத்தார் என்ற சர்ச்சை கிளம்பியது.
மெட்ராஸ் சர்ச்சை பற்றி பேசாமல், பிர்சா முண்டோ சர்ச்சைக்கு வித்தியாசமான முறையில் முற்றுப் புள்ளி வைத்துள்ளார் கோபி நயினார்.
மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்துக்காக போராடிய பிர்சா முண்டாவின் வாழ்க்கையை இருவர் மட்டும் அல்ல இன்னும் பலரும் எடுக்கலாம் என்று கூறியுள்ளார். இதுவரை பிர்சா முண்டாவை பற்றிய இரு படங்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.