சினிமா செய்திகள்
‘சாணிக்காயிதம்’ திரைப்படத்துக்காக ஹீரோ செல்வராகவனின் நியூ லுக்- வைரல் ஃபோட்டோ!
![saani kaayidham - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/saani-kaayidham.jpg)
சாணிக்காயிதம் திரைப்படத்துக்காக நாயகன் ஆகத் தயாராகி வரும் இயக்குநர் செல்வராகவனின் புகைப்படம் ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது.
க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் சாணிக்காயிதம். இந்தப் படத்தின் மூலம் முதன் முறையாக இயக்குநர் செல்வராகவன் நாயகனாக நடிக்க அறிமுகம் ஆகிறார். இவருடன் நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மிகவும் யதார்த்தமான வன்முறை நிறைந்த படமாக சாணிக்காயிதம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். முன்னதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்த போது சாணிக்காயிதம் படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகும் எனக் கூறப்பட்டது. இதையொட்டி தற்போது படத்துக்காக தயாராகி வரும் செல்வாராகவனின் புது லுக் உடனான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram