சினிமா செய்திகள்
மகனுக்குப் பெயர் சூட்டுவிழா- தன் பிறந்தநாளை சேர்த்துக் கொண்டாடிய யோகிபாபு!
தமிழ் காமெடி நடிகர் யோகிபாபு இன்று தனது மகனுக்கு பெயர் சூட்டுவிழாவை நடத்தினார்.
நடிகர் யோகிபாபு இன்று தனது 36-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்தக் கொண்டாட்டத்துடன் தனது மகனின் பெயர் சூட்டு விழாவையும் நடத்தி உள்ளார். யோகி பாபு, மஞ்சு பார்கவி என்பவரை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்குக் கடந்த டிசம்பர் மாதம் மகன் பிறந்தான்.
தனது மகனின் பெயர் சூட்டுவிழாவை இன்று நடத்திய யோகிபாபு நெருங்கிய குடும்பத்தினருக்கு மட்டுமே விழாவுக்கு அழைப்புவிடுத்து இருந்தார். தீவிர முருக பக்தரான யோகிபாபு தனது மகனுக்கு விசாகன் எனப் பெயர் வைத்துள்ளார். விசாகன் என்றாலும் முருகன் என்றே பொருள்படும்.
சமீபத்தில் கூட கிரிக்கெட் வீரர் நடராஜனை சந்தித்து போது கூட அவருக்குப் பரிசாக முருகர் சிலையையே யோகிபாபு அளித்தார். அப்போதே யோகிபாபு பெரிய முருக பக்தராக இருக்கிறாரே என்று செய்திகள் வெளியாகின. மகன் பெயர் சூட்டு விழா உடன் தனது பிறந்தநாளையும் வீட்டிலேயே எளிமையாகக் கொண்டாடி உள்ளார் யோகிபாபு.