சினிமா செய்திகள்
மகள் பிறந்தநாள்… ஒரு கிராமத்துக்கே இலவச கொரோனா தடுப்பூசி- பாராட்டப்படும் நடிகர் மகேஷ் பாபு
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தனது மகளின் பிறந்தநாளை ஒட்டி ஒரு கிராமத்துக்கே சொந்த செலவில் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்துள்ளார்.
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தனது மகள் சித்தாராவின் 9-வது பிறந்தநாளை வெகு விமர்சையாகக் கொண்டாடி உள்ளார். இதற்காக தெலங்கானா மாநிலத்தில் உள்ள சித்தாபூர் என்னும் கிராம மக்களுக்கு தனது சொந்த செலவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள ஏற்பாடு செய்துள்ளார்.
சமீபத்தில் கூட நடிகர் மகேஷ் பாபு தனது தந்தை நடிகர் கிருஷ்ணாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் தந்தையின் பிறந்த ஊரான புர்ரிபாலம் என்னும் கிராமத்துக்கு சொந்த செலவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அம்மக்களுக்கு உதவினார்.
மகேஷ் பாபு ரசிகர் மன்றங்களும் பல ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களுக்குச் சென்று உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளை நன்கொடையாக வழங்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Happy birthday, my little one!! Always lighting up my world. Happy 9! ♥️♥️♥️???????? Love you more than you can imagine! ????????❤️ #SitaraTurns9 pic.twitter.com/LCx9aP2yew
— Mahesh Babu (@urstrulyMahesh) July 20, 2021