சினிமா செய்திகள்
நடிகர் அமிதாப் பச்சன் வீட்டுக்கு முன்னர் போராட்டம்- குவிந்த ராஜ்தாக்கரே கட்சியினர்!
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மும்பை வீட்டுக்கு முன்னர் ராஜ் தாக்கரே கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மும்பையில் உள்ள ஜூகு பகுதியில் நடிகர் அமிதாப் பச்சனின் வீடு உள்ளது. அந்தப் பகுதியில் சாலை விரிவாக்கத்துக்காக அந்த சாலையில் உள்ள அத்தனை வீடுகளுக்கும் மும்பை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பலரது வீட்டு காம்பவுண்டு சுவர்களும் இடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அந்தத் தெரு முழுவதும் ஒப்புக் கொண்டு சாலை விரிவாக்கப் பணியும் நடந்துவிட்டது. ஆனால், அமிதாப் பச்சன் வீட்டு முன்னர் மட்டும் பணிகள் நடைபெறாமல் கிடப்பில் இருந்தது. இதனால், அந்தப் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகள் தொய்வில் உள்ளன. இந்த சூழலில் தான் இந்தப் பிரச்னையை ராஜ் தாக்கரே கட்சியினர் கையில் எடுத்துள்ளனர்.
அமிதாப் பச்சன் வீட்டின் முன்னர் பேனர், பதாதைகள் உடன் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இவ்வளவு பெரிய பிரபலத்துக்கும் பெரிய மனது இல்லையா? என்ற பதாதைகள் கொண்டு போராட்டம் நடந்து வருகிறது.