Connect with us

இந்தியா

பஞ்சாபில் சித்து முதல்வர் வேட்பாளரா? அரவிந்த் கெஜ்ரிவாலின் சூப்பர் பிளான்!

Published

on

பஞ்சாப் மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாபிலும் ஆட்சியை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆம் ஆத்மியின் பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக நவ்ஜோத் சிங் சித்து அவர்கள் நியமனம் செய்யப்படுவர் என்று செய்திகள் வெளியாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபின் பாஜகவில் இணைந்த நவ்ஜோத் சிங் சித்து, அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். காங்கிரஸ் கட்சியில் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருந்தாலும் வரும் தேர்தலில் அவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பஞ்சாப் காங்கிரஸ் மாநில தலைவராகவும் அவர் தேர்வு செய்யப்படவுள்ளார் என்று கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் முதல்வர் அம்ரித் சிங் அவர்களுக்கும் சித்துவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் சித்து காங்கிரசில் அதிருப்தியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் நவ்ஜோத் சிங் சித்து தனது டுவிட்டரில் ஆம் ஆத்மி கட்சியை புகழ்ந்து ட்வீட் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போதைப்பொருள், விவசாயிகள் பிரச்சனை, சீக்கியர்களின் புனித நூல் எரிக்கப்பட்ட பிரச்சனை ஆகிய பிரச்சனைகளை ஆம் ஆத்மி கட்சி நன்றாக அறிந்து வைத்துள்ளது என்றும் ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் சிறப்பாக செயல்படுகிறார் என்றும் சித்து புகழ்ந்து டுவீட்டில் பதிவு செய்துள்ளார். இதனால் ஆம் ஆத்மி கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு சீக்கியர் தான் முதல்வராக வேண்டும் என சமீபத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார். இதனை அடுத்து ஆம் ஆத்மி கட்சியில் சித்து இணைந்தால் அவர் தான் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பஞ்சாபில் காங்கிரஸ் மற்றும் சிரோமணி அகாலி தளம் ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே வலுவாக இருக்கும் நிலையில் சித்துவை முன்னிறுத்தி பஞ்சாபில் ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி கட்சியை திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த முயற்சி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

author avatar
seithichurul
heart attack
ஆரோக்கியம்29 நிமிடங்கள் ago

இளம் வயதிலேயே மாரடைப்பு: காரணம் என்ன?

வணிகம்4 மணி நேரங்கள் ago

ஆதார் விதிகளில் புதிய மாற்றம்?: அக்டோபர் 1 முதல் ஆதார் பதிவு எண்கள் ஏற்கப்படாது!

வணிகம்4 மணி நேரங்கள் ago

BSNL, Elon Musk’s Starlink & Tata இணைவார்களா? இந்திய தொலைத்தொடர்பு துறையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுமா?

ஆட்டோமொபைல்4 மணி நேரங்கள் ago

பைக்கின் விலையில் குட்டி கார்.. விலை எவ்வளவு தெரியுமா?

பிற விளையாட்டுகள்6 மணி நேரங்கள் ago

பாரிஸ் ஒலிம்பிக் 2024: வெண்கலப் பதக்கத்துடன் இந்தியாவின் கணக்கைத் தொடங்கிய மனு பகர்

இந்தியா6 மணி நேரங்கள் ago

போன் திருடு போனதா? வங்கி கணக்கில் பணம் திருட்டா? இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க போதும்!

உலகம்8 மணி நேரங்கள் ago

இந்தியாவில் செருப்பு இல்லாமல் நடப்பது ஏன் கேவலம்? ஆஸ்திரேலியாவில் பெருமை ஏன்?

செய்திகள்9 மணி நேரங்கள் ago

ராக்ஷாபந்தன் எதிரொலி விமான டிக்கெட் கட்டணங்கள் 46% வரை உயர்வு!

பிற விளையாட்டுகள்9 மணி நேரங்கள் ago

பாரிஸ் ஒலிம்பிக் 2024: ஜூலை 28, 2024 – இந்தியாவின் முழு அட்டவணை

பர்சனல் ஃபினான்ஸ்10 மணி நேரங்கள் ago

இந்தியாவில் உள்ள மூத்த குடிம்மக்களுக்கான இந்த 8 நிதி நலன்கள் பற்றி எல்லாம் தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்5 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வணிகம்3 நாட்கள் ago

தங்கத்தின் விலை இன்று காலை குறைந்தது (25.07.2024) என்ன காரணம்?

வணிகம்5 நாட்கள் ago

ஆனந்த் அம்பானி திருமண பரிசுகள்: பிரைவேட் ஜெட் முதல் ஃபாரின் பங்களா வரை!

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024: தமிழ்நாட்டுக்கு கிடைத்து என்ன?

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25: வருமான வரி குறித்த முக்கிய அறிவிப்புக முழு விவரம்!