தமிழ்நாடு
சர்கார் பிரச்சனை எதிரொலி.. விஜய் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
![8 (2) - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/11/8-2.jpg)
சென்னை: சர்கார் படத்தின் பிரச்சனையை தொடர்ந்து, நடிகர் விஜய் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டிற்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சர்கார் படத்திற்கு எதிராக அதிமுகவினர் போராடும் நிலையில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 10க்கும் அதிகமான போலீசார் அவரது வீட்டிற்கு முன் இருக்கிறார்கள்.
அதேசமயம் விஜய் ரசிகர்களும் அவரது வீட்டிற்கு பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். நடிகர் விஜய் வீட்டிற்கு முன் விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த பலர் பாதுகாப்பிற்காக நிற்கிறார்கள்.