சினிமா
கிறிஸ்துமஸ் விருந்தாக வருகிறது மாரி 2!
தனுஷின் மாரி 2 திரைப்படம் கிறிஸ்துமஸ் விருந்தாக வரும் டிசம்பர் மாதம் 21ம் தேதி ரிலீசாகவுள்ளது.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, கிருஷ்ணா, யோகிபாபு நடிப்பில் மாரி 2 படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
முதல் பாகம் சரியாக போகவில்லை என்றாலும், மாரி கதாபாத்திரத்தின் உள்ள கிரேஸ் ரசிகர்களை கவர்ந்தது. இதனால், படத்தின் இரண்டாம் பாகத்தை வலுவான திரைக்கதையுடன் இயக்குநர் பாலாஜி மோகன் உருவாக்கியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அனிருத்தின் பாடல்கள் காஜல் அகர்வாலின் அழகு இந்த படத்தில் ரசிகர்கள் மிஸ் செய்வார்கள் எனவும் கூறப்படுகிறது.