சினிமா செய்திகள்
இந்தியில் ரீமேக் ஆகிறது ‘சூரரைப்போற்று’: சூர்யா கேரக்டரில் யார்?
சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ திரைப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரிலீஸ் ஆனது என்பதும். இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் ’சூரரைப்போற்று’ படம் ஏற்கனவே இந்தி உள்பட ஒரு சில மொழிகளில் ரீமேக் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்தி ரீமேக் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது
சூர்யாவின் 2டி நிறுவனம் மற்றும் பாலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அபண்டாண்டியா என்டர்டைன்மென்ட் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து ’சூரரைப்போற்று’ ஹிந்தி ரீமேக் திரைப்படத்தை தயாரிக்க உள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
தமிழில் இந்த படத்தை தயாரித்த இயக்கிய சுதா கொங்காரா தான் ஹிந்தியிலும் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .தமிழில் சூர்யா மற்றும் அபர்ணா நடித்த கேரக்டரில் நடிப்பதற்காக முன்னணி நடிகர் நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ள இந்த திரைப்படம் தமிழைப் போலவே இந்தியிலும் மாபெரும் வெற்றி பெறும் என்பது என்று எதிர்பார்க்கபடுகிறது.
#BREAKING! @Suriya_offl to remake #SOORARAIPOTTRU' in #Hindi! This will also be directed by #Sudhakongara#Suriya, #Jyotika, @rajsekarpandian & #AbundantiaEntertainment to produce.@CaptGopinath @vikramix @ShikhaaSharma03 @Abundantia_Ent @2D_ENTPVTLTD pic.twitter.com/P4BZLsKO26
— RIAZ K AHMED (@RIAZtheboss) July 12, 2021