கேலரி
வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும்!.. அட நம்ம மாளவிகா இது?… வைரல் புகைப்படம்…
உன்னைத்தேடி, திருட்டு பயலே, சந்திரமுகி, வெற்றிக்கொடிகட்டு, ரோஜாவனம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் மாளவிகா. வெற்றிக்கொடி கட்டு படத்தில் இடம் பெற்ற ‘கருப்புத்தான் எனக்கு புடிச்ச கலரு’ பாடல் அவரை பட்டி தொட்டியெங்கும் பிரபலமாக்கியது. அதன்பின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.
மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘சித்திரம் பேசுதடி’ படத்தில் இடம்பெற்ற ‘வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும்’ பாடல் அவரை மீண்டும் பிரபலமாக்கியது. அதேபோல், சுசி கணேசன் இயக்கத்தில் வெளியான ‘திருட்டுப்பயலே’ திரைப்படத்தில் கிளுகிளுப்பான காட்சிகளில் நடித்து பரபரப்பை உண்டாக்கினார்.
அப்படம் வெற்றி அடைந்த பின்னரும் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.
இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதைக்கண்ட நெட்டிசன்கள், இந்த வயசிலும் அழகாத்தான் இருக்கீங்க என பதிவிட்டு வருகின்றனர்.