சினிமா செய்திகள்
முதல்வர் ஸ்டாலினுடன் நடிகை யாஷிகா எடுத்த வைரல் செல்ஃபி!!!
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நடிகை யாஷிகா ஆனந்த் எடுத்துள்ள செல்ஃபி புகைப்படம் தள்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தன் உடல் நலன் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்வார் என்பது அவரது பல்வேறு செயல்பாடுகள் மூலம் பொது மக்களுக்குத் தெரிந்தது. அவர் அவ்வப்போது தன் உடலையும் உள்ளத்தையும் உற்சாகமாக வைத்துக் கொள்ளும் நோக்கில் சைக்கிளிங் செல்வதும் வழக்கம்.
Selfie with our honourable CM @mkstalin ???????? pic.twitter.com/E3kbnxGH6S
— Yashika Aannand (@iamyashikaanand) July 4, 2021
அந்த வகையில் ஞாயிற்றுக் கிழமையான இன்று அவர், சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளிங் சென்று உள்ளார். அப்போது வழியில் அவருடன் பல பொது மக்கள் உரையாடி உள்ளனர்.
அவர்களுடன் இணைந்து உற்சாகமாக செல்ஃபிகள் எடுத்துக் கொண்டும், உற்சாகம் ததும்பியும் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இது குறித்தான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகின்றன.
இந்நிலையில் நடிகை யாஷிகாவும் முதல்வர் ஸ்டாலினுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார். அதுவும் டிராண்டாகி வருகிறது.