தமிழ்நாடு
மூன்றாவது நாளாக தங்கம் விலை இன்றும் உயர்வு: சென்னையில் என்ன விலை?
கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை குறைந்து கொண்டே வந்த நிலையில் தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம் என்று பொதுமக்கள் காத்திருந்தனர். ஆனால் திடீரென கடந்த 2 நாட்களாக தங்கம் விலை அதிகமாக ஏறிக்கொண்டே வருகிறது என்ற நிலையில் இன்றும் தங்கம் விலை ஏறி உள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து தற்போது பார்ப்போம்.
நேற்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.4480 என்ற விலையில் இருந்த நிலையில் இன்று சென்னையில் கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4485 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. அதே போல் நேற்று சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 35840.00 என்ற விலையில் விற்பனையாகி வந்த நிலையில் இன்று சவரன் ஒன்றிற்கு ரூபாய் 40 உயர்ந்து 35880.00 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் 24 கேரட் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் ரூபாய் 4844.00 என்றும் 8 கிராம் ரூபாய் 38752.00 என்றும் விற்பனையாகி வருகிறது. அதே போல் சென்னையில் வெள்ளியின் விலை இன்று ஒரு கிராம் 74.90 ரூபாய் என்றும் ஒரு கிலோ 74900.00 என்றும் விற்பனையாகிறது. நேற்று ஒரு கிராம் வெள்ளி 74.10 என்றும் ஒரு கிலோ 74100.00 என்றும் விற்பனையாகி வந்த நிலையில் இன்று வெள்ளியின் விலை சற்று உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.