வணிகம்
நகை வாங்க சரியான நேரம்: சென்னையில் இன்று தங்கம், வெள்ளி விலை!
கடந்த சில நாட்களாக சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைந்து வருவதை அடுத்து சென்னை உள்பட இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது
எனவே தங்கம் வாங்க சரியான நேரம் இதுதான் என பொதுமக்கள் கூறிவருகின்றனர். தற்போது சென்னையில் தங்க நகை கடைகள் திறந்து விட்ட காரணத்தினால் தங்கத்தில் முதலீடு செய்யவும் பொதுமக்கள் முன் வந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து பார்ப்போம்
சென்னையில் 22 காரட் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.4410 (நேற்றைய விலை ரூ.4430)
சென்னையில் 22 காரட் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.35280 (நேற்றைய விலை ரூ.35440 )
சென்னையில் 24 காரட் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.4769
சென்னையில் 22 காரட் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.38152
சென்னையில் வெள்ளி ஒரு கிராம் விலை ரூ.72.90 (நேற்றைய விலை ரூ.73.10)
சென்னையில் வெள்ளி ஒரு கிலோ விலை ரூ.72,900 (நேற்றைய விலை ரூ.73100)