கிரிக்கெட்
உலகக்கோப்பை டி20 தொடர்: ஆரம்ப தேதி மற்றும் இறுதிப்போட்டி தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!
உலகக் கோப்பை டி20 தொடர் போட்டி இந்தியாவில் நடைபெறும் என்று திட்டமிட்ட நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருப்பதால் சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டிற்கு இந்த தொடர் மாற்றப்பட்டது என்று பிசிசிஐ தெரிவித்த தகவலை பார்த்தோம்.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் மாதம் 17ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் நாடுகளில் இந்த கிரிக்கெட் போட்டி நடைபெற இருப்பதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஓமன், ஷார்ஜா, அபுதாபி மற்றும் துபாய் ஆகிய நான்கு மைதானங்களில் நடைபெறும் என்றும் முதல் சுற்றில் தேர்வு செய்யப்படும் எட்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு தேர்வு செய்யப்படும் என்றும் அந்த அணிகள் நான்காகப் பிரிக்கப்பட்டு ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளில் இருபிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படும் என்றும் ஐசிசி தெரிவித்துள்ளது. மேலும் எந்தெந்த தேதியில் எந்த அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறும் என்பது குறித்த அட்டவணை மிக விரைவில் வெளியிடப்படும் என்றும் ஐசிசி கூறியுள்ளது.
???? ANNOUNCEMENT ????
Details ???? https://t.co/FzfXTKb94M pic.twitter.com/8xEzsmhWWN
— ICC (@ICC) June 29, 2021