சினிமா செய்திகள்
மகள் திருமணத்திற்காக ஷங்கர் செய்த செலவு இத்தனை கோடியா?
பிரபல இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா திருமணம் நேற்று நடைபெற்றது என்பதும் மதுரையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் தாமோதரன் என்பவரது மகனும், கிரிக்கெட் வீரரான ரோகித் என்பவர் தான் மாப்பிள்ளை என்பதும் தெரிந்ததே. இந்தத் திருமணத்திற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்பட பல விஐபிகள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மகாபலிபுரம் அருகே தனியார் ரிசார்ட் ஒன்றில் நடந்த இந்த திருமணத்திற்காக ஷங்கர் செலவு செய்தது எவ்வளவு என்பது குறித்த தகவல் வந்துள்ளது. கலை இயக்குனரை வைத்து பிரம்மாண்டமான செட் அமைத்து மிகவும் ஆடம்பரமாக ஷங்கர் இந்த திருமணத்தை நடத்தி உள்ளார். திருமணச் செலவாக மட்டும் அவர் ரூபாய் 10 கோடி செலவு செய்து கொள்ளவும் இதுபோக சீர்வரிசைகள் நகைகள் என ஒரு சில கோடிகள் அவர் செலவு செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தகவல் கோலிவுட் திரையுலகினர் இடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் கொரோனா தொற்று குறைந்தவுடன் சென்னையில் பிரமாண்டமாக ரிசப்ஷன் நடத்த அவர் முடிவு செய்திருப்பதாகவும் இதற்கும் ஒரு சில கோடிகள் செலவு செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நேற்று நடைபெற்ற ஷங்கரின் மகள் திருமணத்தில் முழுக்க முழுக்க சைவ உணவுகளே பரிமாற பட்டதாகவும் கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட வகையில் உணவுகள் பரிமாறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.