தமிழ்நாடு
கருணாநிதி வழியை பின்பற்றுங்கள்: ஸ்டாலினுக்கு லாலுபிரசாத் யாதவ் வாழ்த்து!
தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் திமுகவுக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
ஏற்கனவே மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்த நிலையில் தற்போது பீகார் மாநில முன்னாள் முதல் அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
திரு.ஸ்டாலின் பெற்றுள்ள மகத்தான வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள். மதிப்பிற்குரிய கலைஞர் கருணாநிதியை போன்று நீங்களும் சமூக நீதியை முன்னெடுத்து சென்று திராவிட சகோதர, சகோதரிகளின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவீர்கள் என நம்புகிறேன். லாலு பிரசாத்தின் இந்த வாழ்த்தை பலர் ரீடுவிட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Many congratulations Thiru @mkstalin on your stupendous victory! I am sure you will carry forward the social justice legacy of respected Kalaignar Karunanidhi ji and live up to the expectations of dravidian brothers and sisters.
— Lalu Prasad Yadav (@laluprasadrjd) May 2, 2021