தமிழ்நாடு
பாஜகவில் இருந்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு முதல் வாழ்த்துக் குரல்
தமிழகத்தில் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது என்பதும் திமுக தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு அந்த கட்சியின் வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திமுகவின் வெற்றியை அடுத்து திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தேசிய தலைவர்கள் ஏற்கனவே வாழ்த்து தெரிவித்து வந்தனர் என்பதை பார்த்தோம். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் தற்போது பாஜக தரப்பில் இருந்தும் வாழ்த்து கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் முன்னிலை வகித்து வரும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாஜக தரப்பில் இருந்து முதல் வாழ்த்து அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களிடம் இருந்து கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.