சினிமா செய்திகள்
தனுஷின் அடுத்த படம் ரிலீஸ் தேதி இதுதான்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
தனுஷ் நடித்து முடித்துள்ள அடுத்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த திரைப்படம் வசூல் அளவிலும் விமர்சன ரீதியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தனுஷ் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள ’ஜகமே தந்திரம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திரைப்படம் ஜூன் 18-ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இந்த திரைப்படம் ஓடிடியில் தான் ரிலீசாக உள்ளது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் ஓடிடியில் ரிலீஸ் என்பது உறுதி செய்யப்பட்டு ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒய்நாட் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே ஓடிடியில் இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#JagameThandhiram from ????????ℕ???? ???????? only on @netflixindia !@dhanushkraja @karthiksubbaraj @sash041075 @chakdyn @Music_Santhosh @StudiosYNot @RelianceEnt @Shibasishsarkar @APIfilms @SonyMusicSouth @onlynikil pic.twitter.com/g4SKM9cIPk
— Y Not Studios (@StudiosYNot) April 27, 2021