தொழில்நுட்பம்
வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் விளம்பரம்.. உறுதி செய்த நிறுவனம்!
பேஸ்புக்கின் வாட்ஸ்ஆப் செயலியில் இவ்வளவு நாட்களாகத் தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டு வந்த நிலையில் அதில் ஸ்டேட்டஸ் பதிவிடும் முறை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது.
வாட்ஸ்ஆப் பயனர்களிடையே மிகவும் பிரபலமான இந்த ஸ்டேட்டஸ் சேவையில் விளம்பரம் தோன்றும் என்று பேஸ்புக் நிறுவனம் உறுதி செய்துள்ளது. எனவே விரைவில் ஒரு வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் இருந்து அடுத்த ஸ்டேட்டஸ்க்குச் செல்லும் முன்பு விளம்பரம் ஒன்று தோன்றும் என்று செய்தி சுருள் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
சில மாதங்களுக்கு முன்பே அமெரிக்க ஊடகங்கள் வாட்ஸ்அப் செயலியில் விரைவில் விளம்பரம் தோன்றும் என்று தெரிவித்து இருந்தன.