சினிமா செய்திகள்
ஹீரோயின் இல்லாமலேயே டூயட் பாடலின் படப்பிடிப்பை நடத்திய ‘தளபதி 65’ இயக்குனர்!
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 65’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜார்ஜியாவில் தொடங்கியது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் நமக்கு வந்த செய்தியின்படி இந்த படத்தின் 30 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி ஜார்ஜியாவில் டூயட் பாடல் ஒன்றின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக தெரிகிறது. இந்த படத்தின் நாயகியான பூஜா ஹெக்டே தெலுங்கு படங்களில் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருப்பதால் இன்னும் அவர் ஜார்ஜியாவில் நடைபெற்று வரும் தளபதி 65’ படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் அவர் இல்லாமலேயே டூயட் பாடல் ஒன்றின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று உள்ளது என்றால் இந்த படத்தில் நடிக்கும் இன்னொரு நாயகியான அபர்ணா தாஸ் உடன் டூயட் பாடல் படப்பிடிப்பு நடத்தியிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனிருத் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மே மாதம் சென்னையில் தொடங்கும் என்றும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.