சினிமா செய்திகள்
கவின் படத்தில் சிவகார்த்திகேயன்: ஆச்சரிய அறிவிப்பு!
பிக்பாஸ் கவின் நடித்துவரும் ’லிப்ட்’ என்அ படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை பாடி இருப்பதாக கவின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் கவின் தற்போது ’லிப்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிந்த நிலையில் தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
ஐடி அலுவலகத்தில் நடைபெறும் த்ரில் சம்பவம் குறித்த கதையம்சம் கொண்ட இந்த படத்தில் கவின் ஜோடியாக அம்ரியா ஐயர் நடித்து வருகிறார் என்பதும் இவர் ஏற்கனவே விஜய் நடித்த பிகில் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’லிப்ட்’ படத்தின் சிங்கிள் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தனது டுவிட்டர் கவின் உறுதி செய்துள்ளார். மேலும் இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் பாடியதாகவும் அவருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வரபிரசாத் என்பவர் இயக்கிய இந்தப் படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் கவின் திரையுலக வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Magizchi to announce the launch of our first single for #Lift – #InnaMylu @ 5pm tomorrow, sung by our very own siva anna.. ❤️
I can't thank him enough for his support at every juncture in my life.. thanks nae.. thanks for everything @Siva_Kartikeyan ????????????❤️❤️❤️???????? pic.twitter.com/KRrTW9RflJ
— Kavin (@Kavin_m_0431) April 21, 2021