தமிழ்நாடு
நடிகர் விவேக் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்!
இன்று காலை மாரடைப்பு காரணமாக காலமான நடிகர் விவேக்கிற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதும் பல திரையுலக பிரபலங்கள் நேரில் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் சற்று முன் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் விவேக் மறைவு குறித்து தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அவரது டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது
பிரபல நடிகர் விவேக்கின் எதிர்பாராத மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது நகைச்சுவை நடிப்பும், புத்திசாலித்தனமான வசனங்களும் மக்களை மகிழ்வித்தன. அவரது படங்களிலும் அவரது வாழ்க்கையிலும், சுற்றுச்சூழல் மற்றும் சமுதாயத்தின் மீதான அவரது அக்கறை பிரகாசித்தது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அபிமானிகளுக்கும் இரங்கல். ஓம் சாந்தி’ என்று குறிப்பிட்டுள்ளார்.
The untimely demise of noted actor Vivek has left many saddened. His comic timing and intelligent dialogues entertained people. Both in his films and his life, his concern for the environment and society shone through. Condolences to his family, friends and admirers. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) April 17, 2021