வீடியோ
அமர் அக்பர் அந்தோனி டீஸர் ரிலீஸ்!
டோலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான ரவிதேஜா நடிப்பில் உருவாகியுள்ள அமர் அக்பர் அந்தோனி படத்தின் டீஸர் ரிலீசாகியுள்ளது.
அமிதாப்பச்சன் நடிப்பில் 80களில் வந்த அமர் அக்பர் அந்தோனி படம் மெகா ஹிட் ஆனது. அதே பெயரில், டோலிவுட்டில் தற்போது ரவிதேஜா நடித்துள்ள படம் உருவாகியுள்ளது. ஆனால், இது அந்த படத்தின் ரீமேக் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
ரவிதேஜாவிற்கு ஜோடியாக இந்த படத்தில் இலியானா நடித்துள்ளார். தமன் இசையமைத்திருக்கும் இந்த படத்தை ஸ்ரீனு வைத்லா இயக்கியுள்ளார். வரும் நவம்பர் 16ஆம் தேதி படம் உலகம் முழுவதும் ரிலீசாகிறது.