தமிழ்நாடு
சென்னை ஈ.வெ.ரா பெரியார் சாலை பெயர் மாற்றப்பட்டதா?
சென்னை ஈவேரா பெரியார் சாலை பெயர் மாற்றப்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் பரவி வரும் செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் பல ஆண்டுகளாக ஈவேரா பெரியார் சாலை அழைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திடீரென தேசிய நெடுஞ்சாலையின் அறிவிப்பு பலகையில் கிராண்ட் டிரங்க் ரோடு என்ற பெயராக ஈவேரா பெரியார் சாலை மாறியுள்ளது. அதேபோல் தேசிய நெடுஞ்சாலையில் இணையதளத்திலும் டிரங்க் ரோடு என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் சென்னையிலுள்ள பெரியார் ஈவெரா சாலையின் பெயரானது மாற்றப்பட்டதா? என்பது குறித்த அதிர்ச்சியை பெரியாரின் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலைத்துறையின் இந்த செயலால் பெரியாரின் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டது என அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் மீண்டும் ஈவேரா பெரியார் சாலை என்று தேசிய நெடுஞ்சாலையின் அறிவிப்பு பலகையிலும் இணையதளத்திலும் மாற்றப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.