Connect with us

விமர்சனம்

அழகான, அதிர்ச்சியான அனுபவத்தைப் பெறக் காத்திருங்கள்… கர்ணன் விமர்சனம்!

Published

on

திருநெல்வேலி பொடியன்குளம் கிராமம் மெயின் ரோட்டில் இருந்து 1.5 கி.மீ தூரத்தில் இருக்கும் கிராமம். அந்த ஊருக்கு பேருந்து வசதி இல்லை என்பதால் அருகில் இருக்கும் மேலூருக்குச் சென்றுதான் பஸ் ஏற வேண்டிய சூழல் அக்கிராம மக்களுக்கு. அப்படிப் போகும் போது அங்கிருக்கும் மக்களுடன் அடிக்கடி சண்டை ஏற்படுவதால் தங்கள் ஊர் அருகிலேயே ஏதாவது லாரி, வேன், டிராக்டர் போன்ற வாகனங்களை மறைத்து அருகில் இருக்கும் ஊருக்கு போவார்கள். இதுதான் மையம். பேருந்து வசதி கிடைப்பதற்காக அந்த ஊர் இளைஞர் ஒருவன் போராடுகிறான். ஊர் மக்கள் அவனுக்கு துணை நிற்கிறார்கள். ஊரின் உதவியுடன் பேருந்து வசதி கிடைத்ததா இல்லையா என்பதை அழகான திரைமொழியில் சொல்லியிருக்கும் படம் தான் கர்ணன்.

மேலே சொன்னது போல பேருந்து நிறுத்தம் என்பது ஒரு காரணம் தான். ஆனால், இப்படத்தின் மையம் 1995-இல் நடந்த கொடியன்குளம் கலவரம். தேவேந்திரகுல வேளாள சமூகத்திற்கும், தேவர் சமூகத்திற்கும் நடந்த பிரச்சினையில் கொடியன் குளத்தில் 18 பேர் கொலை செய்யப்பட்டுள்ளன. அக்கிராம மக்களின் சொத்து, குடிநீர் எல்லாம் அழிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய கலவரத்தை மையப்படுத்தி தற்போது அதை பேசு பொருள் ஆக்கியிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். அதற்கு தனுஷ் எனும் விற்பனை நட்சத்திரம் பயன்பட்டிருக்கிறது.

எப்போதும் ஒடுக்கப்படும் மக்கள் ஒரு கட்டத்தில் பொங்கி எழுந்தால் அதன் முன் எதுவும் நிற்காது அழிந்து போகும். இதில் இருக்கும் அரசியல் எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும் படம் எப்படி இருக்கிறது என்பதை இங்கு பார்ப்போம். புரிதலுக்காகவே இவை இங்கே சொல்லப்பட்டுள்ளன
கர்ணனாக நடிகர் தனுஷ்… அட்டகாசம் பண்ணியிருக்கிறார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றார்போல தன்னை மாற்றிக்கொண்டு உடல் மொழி, குரல் என அப்படியே அந்த பாத்திரத்திற்குத் தேவையானதைக் கொடுத்துவிட்டுப் போகிறார். இதிலும் அப்படியே கர்ணனாக. பல இடங்களில் மெய் சிலிர்க்க வைக்கிறார். இப்படத்தின் இரண்டாவது ஹீரோ என்று சொல்லும் அளவிற்கு ஏமராஜாவாக நடிக்கும் மலையாள நடிகர் லாலின் பாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. எதற்கெடுத்தாலும் கோபம், அதனால் சில பிரச்சினைகள் என்று இருக்கும் ஹீரோ பாத்திரத்தை ஆசுவாசப்படுத்தி அதற்கு சப்போர்ட்டாக இருக்கிறார் ஏமராஜா. தேவையான நேரத்தில் அந்தப் பாத்திரம் எடுக்கும் முடிவின் போது ஒரு எமோஷன்ஸை அட்டகாசகாம கடத்தியிருப்பார். யோகி பாபு, குதிரை மேய்க்கும் சிறுவன், தனுஷின் சகோதரியாக வரும் லட்சுமி ஆகிய பாத்திரங்கள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகிக்கு முக்கியப் பாத்திரம் கொடுத்துவிட்டு இங்கு கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கிறார். தேவைக்கு ஏற்ற அழகான நடிப்பை கொடுத்திருக்கிறார் தமிழுக்கு அறிமுக நடிகை ரஜிஷா விஜயன். மற்றபடி இதில் வரும் பாத்திரங்கள் எல்லாம் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை சிறப்பாகவே செய்திருக்கின்றன.

படத்தின் மிகப்பெரிய பலம் இசை… அது பின்னணி இசை என்று தெரியாத அளவிற்கு சந்தோஷ் நாராயணம் அமைத்த விதம் எல்லாம் அட்டகாசம். தான் தேர்ந்தெடுக்கும் இயக்குநர்களிடம் இருந்து அரசியலை கற்றுக்கொண்டு அதை நன்றாகப் புரிந்து கொண்டு அந்தந்த கதைக்களத்திற்கு ஏற்ற இசையைக் கொடுக்கிறார். பாடல்கள் எல்லாம் ஏற்கெனவே ஹிட் என்ற போதும் படத்தோடு பார்க்கும் போது அது காட்சியாக்கப்பட்ட விதத்திலும் மேலும் கவர்கின்றன. தியேட்டரை விட்டு வந்த பின்னரும் கண்டா வர சொல்லுங்க பாடலை விட வுட்ராதீங்க யம்மோ பாடல் உங்கள் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கும்.

படத்தின் அடுத்த மிகப்பெரிய பலம் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு… முதல் காட்சியில் தொடங்கி இறுதிக் காட்சி வரை ஒத்து பாத்திரத்தின் உணர்வுகளை அட்டகாசமாகப் பதிவு செய்திருக்கிறார். காட்சிக்கு காட்சி அழகு ஏற்றிக்கொண்டே செல்கிறார் தேனி ஈஸ்வர். கதையின் அழுத்தத்தைப் புரிந்து கொண்டு அதற்கு மேலும் அழுத்தம் கொடுக்கிறது ஒளிப்பதிவு. படத்தை மியூட்டில் பார்த்தாலும் படம் நன்றாக புரியும். அந்த அளவிற்கு ஒளிப்பதிவு இருக்கிறது.

அடுத்த ஹீரோ கலை இயக்குநர் டி.ராமலிங்கம். செவக்காட்டு பூமியில் ஒரு அழகான கிராமத்தை அட்டகாசமாக உருவாக்கியிருக்கிறார். ஒவ்வொரு சுவரும் கதை சொல்கிறது. நாட்டார் தெய்வங்களின் அமைப்பு. ஊரின் தெரு, வீடுகளின் கூரை, சுவர், கடை என அனைத்தையும் அவ்ளோ அழகாக அமைத்திருக்கிறார். இப்படி ஒவ்வொரு தொழில்நுட்ப வல்லுநர்களையும் தேர்ந்தெடுத்துத் தான் எடுக்கப்போகும் கதை இதுதான் என புரிய வைத்து தான் நினைத்ததை சமரசம் இல்லாமல் கொடுத்திருக்கிறார் மாரி செல்வராஜ். இதில் இருக்கும் அரசியலை பேச இன்னொரு கட்டுரை வேண்டும். ஆனால், கொடியன்குளம் கலவரம் என்று கூகுளில் போட்டால் அந்த கலவரம் தொடர்பான செய்திகள் கிடைக்கப்பெறும்.

படத்தில் குறைகளே இல்லையா என்றால், ஒட்டாத காதல் காட்சியைச் சொல்லலாம். அவைகளை அப்படியே நீக்கிவிட்டாலும் படத்தில் எந்த பாதிப்பும் இருக்காது. சினிமா தனமான கிளைமேக்ஸ். ஆனால், இந்தக் கலவரத்தின் முடிவு அப்படித்தான் இருந்தது என்று சொன்னாலும் தனுஷ்-க்காக சில சமரசங்களைச் செய்திருக்கலாம் தான்.

தான் சொல்லவந்த கதையை அழகாக, எந்த சமரசமும் இல்லாமல் சமூகத்தின் முன் வைத்திருக்கிறார் மாரி செல்வராஜ். வசனங்கள் மூலம், காட்சிகளின் மூலம் இன்னும் பெரிய அரசியல் பேசியிருக்கிறான் இந்த கர்ணன். நிச்சயம் திரையில் பார்க்க வேண்டிய படம். அழகான, அதிர்ச்சியான அனுபவம் கொடுக்க காத்திருக்கிறான்…

இந்தியா7 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்7 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு9 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!