கிரிக்கெட்
மும்பை அணியின் விக்கெட்டுக்களை சுருட்டிய பெங்களூர் பவுலர்கள்: டார்கெட் எவ்வளவு?
![mum vs bang - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/04/mum-vs-bang.jpg)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியான இன்றைய போட்டியில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதி வருகின்றன என்பதை பார்த்தோம். இன்றைய போட்டியில் டாஸ் வென்ற விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்ததை அடுத்து மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது
அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா உள்பட முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். கிறிஸ் லின் மட்டும் ஓரளவுக்கு தாக்குப்பிடித்து 49 ரன்கள் அடித்தார்/ அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மும்பை அணி முதல் இன்னிங்சில் 200க்கும் அதிகமான ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் பெங்களூர் அணி பந்து வீச்சாளர்களின் அபாரமான பந்து வீச்சு காரணமாக மும்பை அணி 159 ரன்களுக்கு சுருண்டது என்பதும் ஹர்ஷல் பட்டேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் 160 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி பெங்களூரு அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங்கில் களமிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.