கிரிக்கெட்
IPL- புது லுக்கில் டேவிட் வார்னர்!
இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல் தொடரில் இதுவரை 13 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் நாளை துவங்கி மே 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்ற ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் கொரோனா தாக்கத்தால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் முழுவதும் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படாமலேயே நடத்தப்பட உள்ளது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி பலம் பொருந்திய குழுக்களாக உள்ளன. இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான மும்பை, இந்த முறையும் ஐபிஎல் தொடரைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
View this post on Instagram
அதே நேரத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற அணிகளும் டஃப் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், தன் அணியினருடன் பயோ பபுள் சூழலில் பயிற்சி எடுத்து வருகிறார். அவர் ஐபிஎல் போட்டித் தொடங்குவதற்கு முன்னர் தனது புதிய லுக் குறித்தான புகைப்படத்தையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.