சினிமா செய்திகள்
விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா ரொமான்ஸ்: ஈஸ்டர் சிறப்பு புகைப்படம் வைரல்!
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகின்றனர் என்பதும் இவர்களுடைய திருமணம் இந்த ஆண்டு நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கங்களில் அவ்வப்போது நயன்தாராவுடன் எடுக்கப்பட்ட ரொமான்ஸ் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பது தெரிந்ததே.
அந்த வகையில் சற்று முன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை பதிவு செய்து அதில் ஈஸ்டர் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஈஸ்டர் தினம் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான தினம் என்றும் அதில் விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா தற்போது ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது தயாரிப்பில் உருவாகி வரும் நெற்றிக்கண் என்ற திரைப்படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார். அதுபோக நயன்தாரா தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த உள்பட 4 திரை படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.